Jan
29

தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா

karuna_makinrthaஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் ஃபொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.

தமிழ் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த “துரோகம்” காரணம் எனவும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.

மேலும் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts:

  1. இலங்கைக்குக் கடன்; சர்வதேச கண்ணோட்டமும் கருத்தில் கொள்ளப்படும் : சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்குவது தொடர்பில், சர்வதேசத்தின் கண்ணோட்டங்களும்...
  2. விடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு   தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு  தாம் பின்னால் இருந்து...
  3. Feeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி எனது வலைபதிவை சேர்ப்பதற்கு, உங்களின் தகவல் ஓடைத் திரட்டியைத் தெரிவுசெய்யுங்கள். Please choose...
  4. Pillai Raja Koopura foundation stone Dear all   Pillaiyaar Raja Koopura foundation stone laid...



Post a Comment
Name:
Email:
Website:
Comments:


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly