தமிழ்மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியால் சிங்களவரே நன்மையடைவர்
வடக்கு கிழக்கின் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு 2900 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மாவட்டங்களின் கிராமபுற பாடசாலைகளில் கல்வி பயிலும் மணவர்களிடையே போசாக்கின்மை இனம்காணப்பட்டுள்ளதாகவும் இவற்றை நிவர்த்தி செய்வதற்காக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா அரசின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நடப்பாண்டு மாணவர்களுக்கான மதிய உணவிற்காக கல்வி அமைச்சினால் 2900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு இவ் மதிய உணவுத்திட்டம் சென்றடைவதில்லை என்றும், இது சிங்கள பாடசாலைகளுக்கே சென்றடைகின்றதாகவும் கல்விச்சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள கல்வி அமைச்சு அதனை சிங்கள மாணவர்களுக்கே சென்றடையும் நடவடிக்கையில் சிங்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.