பிரித்தானிய பிரதமர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியா பிரதமர் உட்பட பெருமளவான உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறீலங்கா அரசின் ஆதரவுடன் இயங்கும் அதன் துணை கட்சியான விமல் வீரவன்சா தலைமையிலான தேசிய சுதந்திர முன்னனி இன்று காலை பிரித்தானியா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளர்கள் பிரித்தானியா பிரதமர் கோடன் பிரவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் ஆகியோரின் புகைப்படங்களுக்கு வரிப்புலி உடை வர்ணம் தீட்டியிருந்தனர்.
அரசினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிரித்தானியா தூதரகம் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதா என பிரித்தானியா தூதரக பேச்சாளரிடம் கேட்ட போது பிரித்தானியா எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்த போதும் பிரித்தானியா தூதரகம் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டமை மற்றும் அதன் பிரதிநிதிகளை சந்தித்தமை ஒரு வரமுறை தெரியாத நடவடிக்கை என சிறிலங்கா அரசு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.