47 அகதிகள் இலங்கை சென்றனர்
இலங்கையில் போர் நடந்த பகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அங்கு மக்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திருச்சி வாழவந்தான் அகதிகள் முகாம், கரூர் ராயனூர் முகாம், மண்டபம் முகாம், தூத்துக்குடி தாப்பாத்தி முகாம் மற்றும் இந்தியாவில் பிறந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு குடும்பங்களை சேர்ந்த 47 அகதிகள் தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு சென்றனர்.
அவர்கள் தாயகம் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை பன்னாட்டு அகதிகள் மறுவாழ்வு மையம் ஏற்பாடு செய்து இருந்தது. இலங்கை சென்ற அகதிகளுக்கு செலவுக்கு பணம் மற்றும் கப்பலில் இலவசமாக பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதே போன்று கடந்த மாதம் 31 பேர் இலங்கைக்கு சென்றனர்.